மக்கள் சேவையில் இன்னுமொரு டிஜிட்டல் முன்னேற்றம்!
🤖 நல்லூர் பிரதேச செயலகத்தின் WhatsApp AI உதவியாளர்
மக்களுக்கான சேவைகளை மேலும் விரைவாகவும், இலகுவாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் வழங்கும் நோக்கில், நல்லூர் பிரதேச செயலகத்தினால் WhatsApp AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📲 இனி பிரதேச செயலக சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை உங்கள் கையடக்கத் தொலைபேசியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்:
✅ சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்கள்
✅ நலத்திட்ட சேவைகள்
✅ GN பிரிவு சேவைகள்
✅ வணிகப் பதிவு தொடர்பான வழிகாட்டல்கள்
✅ பொதுக் கேள்விகளுக்கான பதில்கள்
✅ அலுவலக சேவைத் தகவல்கள்
🕐 24/7 சேவை | 🌐 தமிழ் • සිංහල • English
📱 பயன்படுத்துவது மிகவும் எளிது!
+94 77 192 1540 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம்
💬 “Hi” அல்லது “வணக்கம்” என்று அனுப்புங்கள்.
🤖 AI உதவியாளர் உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற உடனடியாக வழிகாட்டும்.
💚 சேவைக்கே முதலிடம்!
✨ உங்கள் கேள்விகள் — எங்கள் ஆதரவு.
🌿 மேம்பட்ட சேவைகள் • ஒன்றாக முன்னேற்றம்!

 

 

 

தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் கடிதத்தினை இப்போது வீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

FB IMG 1784181434588

 
 
 
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு 09.06.2026 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தலைவராக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஆளுமையும் திறனாற்றலும் கொண்ட எமது நல்லூர் பிரதேச செயலக 55க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனாற்றலால் பிரதேச செயலக ரீதியாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி வாகை சூடினர். அவ்வெற்றிக்கிண்ணத்தை நிகழ்வில் கலந்து கொண்ட எமது உதவிப்பிரதேச செயலாளர் சிவகரன் அவர்கள் அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
எமது பிரதேச வெற்றி வீரர்களான மாற்றுத்திறனாளிகளை பாராட்டுவதுடன் இந்நிகழ்வில் விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட இடைவேளை நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துடன் இணைந்து எமது பிரதேச செயலக மாற்றுத்திறனாளிகளும் பங்கு பற்றி பாராட்டு பெற்றது மகிழ்வுக்குரியது ஆகும். மேலும் எமது நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவபூமி மனவிருத்தி பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் விருந்தினர்களை அழைத்து வருவதற்கான பாண்ட் இசைக்குழு நிகழ்வை வழங்கி சிறப்பித்தனர். எமது பிரதேச செயலக த்தின் இவ்வருடம் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்று செனாறுள்ள சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளி மாணவி உதயச்சந்திரன் கபீனா இவ் விளையாட்டு நிகழ்வின் சத்தியபிரமாண நிகழ்வை ஆற்றினார்
3 2 4 5
 
 
நல்லூர் பிரதேச 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலர் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் கௌரவ இராமநாதன் அர்ச்சுனா (பா.உ) அவர்கள் கலந்துகொண்டதுடன் மாநகரசபை பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கினணப்புக் குழு தலைவரது பிரத்தியேக உதவியாளர், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம், பிரதேசத்தின் தேவைப்பாடுகள் மேலும் பிரதேசத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல ஆக்கபூர்வமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
 
d1 d2 d3 d4 d5
d6 d8
 
 
 
 
 
"Citizen-Centric Administration – Citizen Mirror: Divisional Productivity Index 1.0"
 
தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டியில் எமது பிரதேச செயலகம்,
🥇 மாவட்ட மட்டத்தில் முதலிடம் (1/15)
🥇அகில இலங்கை ரீதியில் முதலிடம் (1/340) பெற்றுள்ளது.
விசேடமாக இதில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இது அரச பொறிமுறையில் முன்னணி வகிக்கும் சேவை வழங்கல் வலையமைப்பு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறனை அளவீடு செய்வதற்கும் , மதிப்பீடு செய்வதற்கும் மக்களை மையப்படுத்திய நிர்வாகம் (Citizen Mirror) பிரதேச உற்பத்தி்த்திறன் சுட்டெண் 1.0 தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரகாரம் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு,பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்திட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளை உள்ளிட்டு அகில இலங்கை ரீதியில் 96.23% புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாவது நிலைக்கு நல்லூர் பிரதேச செயலகம் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று கொழும்பு Galle Face Hotel இல் நடைபெற்றது.
இதற்கான சான்றிதழை மதிப்பிற்குரிய நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சஞ்சீவ் சுதாசினி அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
725006194 2892026324468238 8682721448199220386 n 725684746 2892026361134901 5176235622406235263 n 725989105 2892026411134896 904504747263940937 n
 
725611423 2892026594468211 7677402515927781974 n 725787216 2892026467801557 5408460826463938083 n 725880329 2892026714468199 4660227089906372546 n
 
725904891 2892026837801520 7728590818356512216 n 726358170 2892027397801464 383028221352236652 n
FaLang translation system by Faboba
Scroll To Top