யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு 09.06.2026 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தலைவராக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஆளுமையும் திறனாற்றலும் கொண்ட எமது நல்லூர் பிரதேச செயலக 55க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனாற்றலால் பிரதேச செயலக ரீதியாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி வாகை சூடினர். அவ்வெற்றிக்கிண்ணத்தை நிகழ்வில் கலந்து கொண்ட எமது உதவிப்பிரதேச செயலாளர் சிவகரன் அவர்கள் அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
எமது பிரதேச வெற்றி வீரர்களான மாற்றுத்திறனாளிகளை பாராட்டுவதுடன் இந்நிகழ்வில் விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட இடைவேளை நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துடன் இணைந்து எமது பிரதேச செயலக மாற்றுத்திறனாளிகளும் பங்கு பற்றி பாராட்டு பெற்றது மகிழ்வுக்குரியது ஆகும். மேலும் எமது நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவபூமி மனவிருத்தி பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் விருந்தினர்களை அழைத்து வருவதற்கான பாண்ட் இசைக்குழு நிகழ்வை வழங்கி சிறப்பித்தனர். எமது பிரதேச செயலக த்தின் இவ்வருடம் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்று செனாறுள்ள சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளி மாணவி உதயச்சந்திரன் கபீனா இவ் விளையாட்டு நிகழ்வின் சத்தியபிரமாண நிகழ்வை ஆற்றினார்




















