"Citizen-Centric Administration – Citizen Mirror: Divisional Productivity Index 1.0"
 
தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட மக்களை மையப்படுத்திய நிர்வாகம் - Citizen Mirror : Divisional Productivity Index _ 1.0 போட்டியில் எமது பிரதேச செயலகம்,
🥇 மாவட்ட மட்டத்தில் முதலிடம் (1/15)
🥇அகில இலங்கை ரீதியில் முதலிடம் (1/340) பெற்றுள்ளது.
விசேடமாக இதில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இது அரச பொறிமுறையில் முன்னணி வகிக்கும் சேவை வழங்கல் வலையமைப்பு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறனை அளவீடு செய்வதற்கும் , மதிப்பீடு செய்வதற்கும் மக்களை மையப்படுத்திய நிர்வாகம் (Citizen Mirror) பிரதேச உற்பத்தி்த்திறன் சுட்டெண் 1.0 தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரகாரம் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு,பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்திட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளை உள்ளிட்டு அகில இலங்கை ரீதியில் 96.23% புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாவது நிலைக்கு நல்லூர் பிரதேச செயலகம் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று கொழும்பு Galle Face Hotel இல் நடைபெற்றது.
இதற்கான சான்றிதழை மதிப்பிற்குரிய நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சஞ்சீவ் சுதாசினி அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இச்சாதனைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
725006194 2892026324468238 8682721448199220386 n 725684746 2892026361134901 5176235622406235263 n 725989105 2892026411134896 904504747263940937 n
 
725611423 2892026594468211 7677402515927781974 n 725787216 2892026467801557 5408460826463938083 n 725880329 2892026714468199 4660227089906372546 n
 
725904891 2892026837801520 7728590818356512216 n 726358170 2892027397801464 383028221352236652 n
FaLang translation system by Faboba
Scroll To Top