நல்லூர் பிரதேசத்திற்கான பிராஜாசக்தி உபகுழு கூட்டம் இன்று 29/04/2026 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் (பா.உ.) அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டதில் பிரதேச செயலாளர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி சபையின் தவிசாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், திட்டங்களுடன் தொடர்புடைய திணைக்கள தலைவர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் அவற்றின் சாத்தியத்தன்மை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


Read more: 2026ம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் கமுர்த்தி அபிவிருத்தி திண்ணைக்களத்தினால் நடாத்தப்பட்ட "பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழாவானது 28.10.2025 திகதி அலரிமாளிகையில் நடை பெற்றது இவ் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக் குரிய சமுர்த்தி