கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் கமுர்த்தி அபிவிருத்தி திண்ணைக்களத்தினால் நடாத்தப்பட்ட "பிரஜா ஹரசர' தேசிய விருது வழங்கும் விழாவானது 28.10.2025 திகதி அலரிமாளிகையில் நடை பெற்றது இவ் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக் குரிய சமுர்த்தி
வங்கிகள்,சமுரத்தி மகாசங்கங்கள்,சமுர்த்தி சமுதாய மட்ட அமைப்பு, பிரதேச மட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்கு தேசிய மட்ட விருது வழங்கி கௌரவிக்கப்பபடது .இவ் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு 4 விருதுகள் கிடைக்கப்பெற்றது.
01) கல்வியங்காடு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி தேசிய ரீதியில் 7ம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கு முகாமையாளர் வலய உதவியாளர், வங்கி உத்தியோகத்தர், கட்டுப்பாட்டுச் சபைத் தலைவி ஆகியோர் விருது வழங்கி கௌவிக்கப்பட்டனர்.
02) மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சிறந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கான விருது J/95 பிரிவு சுடரொளி சமுதாய மட்ட அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றது அவ் அமைப்பின் தலைவி திருமதி.இ . விஜயலட்சுமி, அப் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. .கா.சிவகாந்தன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
3) தேசிய ரீதியில் நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்கம் 5 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கு மகாசங்க நிறைவேற்று குழு தலைவர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர், தலமையக முகாமையாளர் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
04) மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தை பெற்றுக் கொண்ட சிறந்த பிரதேச மட்ட அமைப்பிற்கான விருது நல்லூர் பிரதேச மட்ட அமைப்பிற்கு கிடைக்கப் பெற்றது. அவ் விருதுக்கான கௌரவிப்பை
மகாசங்க நிறைவேற்று குழு தலைவர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் சமுதாய மட்ட அமைப்பு விடய உத்தியோகத்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவ்விருதுகளை பெற்றுக்கொள்ள ஒத்துழைத்த வங்கி முகாமையாளர். மகாசங்க முகாமையாளர், உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் அனைவருக்கும் நல்லூர் பிரதேச செயலகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.




















