நடமாடும் சேவை – பொதுமக்களுக்கான அறிவித்தல்

நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📍 கிராம அலுவலர் பிரிவு: J/113

🏢 இடம்: கிராம உத்தியோகத்தர் அலுவலகம்,
கலைமகள் வீதி, கல்வியங்காடு.

📅 திகதி: 15.10.2026 (வியாழக்கிழமை)

⏰ நேரம்: மு.ப. 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை.

🔹 வழங்கப்படும் சேவைகள்:
✅ தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள்
✅ ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் தொடர்பான சேவைகள்
✅ உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு
✅ பதிவாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பான சேவைகள்

பொதுமக்கள் அனைவரும் இச்சேவையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நல்லூர் பிரதேச செயலகம்
சேவைக்கே முதலிடம்

 
📢💼 தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு! 💼📢
🌟 யாழ்ப்பாண மாவட்ட தொழிற்சந்தை – 2026 🌟
📅 03.10.2026 | சனிக்கிழமை
⏰ காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
📍 யாழ்ப்பாண மாவட்ட செயலகம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்காக நடைபெறவுள்ள இத்தொழிற்சந்தையில் கலந்து கொண்டு பின்வரும் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
🔹 👔 தனியார் துறை வேலைவாய்ப்புகள்
🔹 🧭 தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்
🔹 🎓 தொழிற்பயிற்சி நெறிகள் தொடர்பான வழிகாட்டல்கள்
🔹 ✈️ வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள்
 
CamScanner 21 09 2026 11.24
👩‍💼👨‍💼 தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
👇 இணையவழிப் பதிவிற்கு:
"இங்கே பதிவு செய்யுங்கள் – https://docs.google.com/.../1FAIpQLSfnCnmUWsz6uI.../viewform
📄 குறிப்பு:
கலந்து கொள்பவர்கள் தங்களது சுயவிவரக் கோவையின் (CV/Resume) பிரதிகளை தவறாமல் எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
📞 தொடர்புகளுக்கு:
076 861 5315
076 467 9926
✨ உங்கள் திறமைக்கு ஏற்ற தொழில் வாய்ப்பைத் தேடுங்கள்!
உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள்!
 
மக்கள் சேவையில் இன்னுமொரு டிஜிட்டல் முன்னேற்றம்!
🤖 நல்லூர் பிரதேச செயலகத்தின் WhatsApp AI உதவியாளர்
மக்களுக்கான சேவைகளை மேலும் விரைவாகவும், இலகுவாகவும், அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் வழங்கும் நோக்கில், நல்லூர் பிரதேச செயலகத்தினால் WhatsApp AI உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📲 இனி பிரதேச செயலக சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை உங்கள் கையடக்கத் தொலைபேசியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்:
✅ சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்கள்
✅ நலத்திட்ட சேவைகள்
✅ GN பிரிவு சேவைகள்
✅ வணிகப் பதிவு தொடர்பான வழிகாட்டல்கள்
✅ பொதுக் கேள்விகளுக்கான பதில்கள்
✅ அலுவலக சேவைத் தகவல்கள்
🕐 24/7 சேவை | 🌐 தமிழ் • සිංහල • English
📱 பயன்படுத்துவது மிகவும் எளிது!
+94 77 192 1540 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம்
💬 “Hi” அல்லது “வணக்கம்” என்று அனுப்புங்கள்.
🤖 AI உதவியாளர் உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற உடனடியாக வழிகாட்டும்.
💚 சேவைக்கே முதலிடம்!
✨ உங்கள் கேள்விகள் — எங்கள் ஆதரவு.
🌿 மேம்பட்ட சேவைகள் • ஒன்றாக முன்னேற்றம்!
🪪 தேசிய அடையாள அட்டை தொடர்பான நடமாடும் சேவை
நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📍 இடம்:
பூம்புகார் சனசமூக நிலையம்
📅 திகதி:
15.09.2026
⏰ நேரம்:
காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
🔹 வழங்கப்படும் சேவைகள்
• புதிய தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல்
• தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம்
• திருத்தங்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல்
💰 கட்டண விபரங்கள்
• புதிய விண்ணப்பம் – ரூ. 340.00
• 16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தண்டப்பணம் – ரூ. 2,500.00
• திருத்தங்களுக்கான கட்டணம் – ரூ. 640.00
• தொலைந்தமைக்கான கட்டணம் – ரூ. 1,140.00
• புகைப்படக் கட்டணம் – ரூ. 400.00
📢 தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தில் பூம்புகார் சனசமூக நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் கடிதத்தினை இப்போது வீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

FB IMG 1784181434588

FaLang translation system by Faboba
Scroll To Top