
தேசிய அடையாள அட்டை தொடர்பான நடமாடும் சேவை
நல்லூர் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களின் நலன் கருதி தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்:
பூம்புகார் சனசமூக நிலையம்

திகதி:
15.09.2026

நேரம்:
காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

வழங்கப்படும் சேவைகள்
• புதிய தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல்
• தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம்
• திருத்தங்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுதல்

கட்டண விபரங்கள்
• புதிய விண்ணப்பம் – ரூ. 340.00
• 16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தண்டப்பணம் – ரூ. 2,500.00
• திருத்தங்களுக்கான கட்டணம் – ரூ. 640.00
• தொலைந்தமைக்கான கட்டணம் – ரூ. 1,140.00
• புகைப்படக் கட்டணம் – ரூ. 400.00

தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் குறித்த திகதி மற்றும் நேரத்தில் பூம்புகார் சனசமூக நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.