வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் அலகும், நல்லூர் பிரதேச செயலக கலாசாரப்பேரவையும் இணைந்து கொக்குவில் செல்வகால் திருமணமண்டபத்தில் 2025.07.25அன்று வெகு விமர்சையாக பண்பாட்டு பெரு விழாவை நல்லூர் பிரதேச செயலாளரும் நல்லூர் கலாசாரப் பேரவைத்தலைவரும் ஆகிய பெருமதிப்புக்குரிய திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் வெகு விமர்சையாக முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு யாழ் மாவட்ட அரச அதிபர் திருவாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களும், கெளரவ விருந்தினர்களாக இராஜேஸ்வரி அறக கட்டளை நிறுவுனர் திருவாளர் செல்லத்துரை திருமாறன், .யாழ் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணாலினி விஜயரட்ணம் மற்றும் நல்லூர் துறைசார் மூத்த கலைஞர்கள் இளங்கலைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்தனர்

அறநெறி மாணவர்களின் கும்பி கோலாட்டம், ,கோண்டாவில் பதுமன் குழுவினரின் மங்கல இசையோடு மலர் மாலை அணிவித்து விருந்தினர் வீதி வழியாக அழகாக மண்டபம் நோக்கி அழைத்து செல்லப்பட்ட பண்பாட்டு நிகழ்வோடு பண்பாட்டு பெருவிழா ஆரம்பித்தது

ஈழத்திலும் சர்வதேச ரீதியிலும் தன் நாடக அரங்காற்றுகையால் நாடக பிதாமகன் என்று அழைக்கப்பட்ட அமரர் குழந்தை சண்முகலிங்கம் அரங்கில் அருமையாக இயற்கையை பிரதிபலிக்கும் சூழல் நேயப்பொருட்களைக்கொண்டு உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட பனரின் காட்சி படிமத்தோடு அரங்கம் அழகாக காட்சியளித்தது

வரவேற்புரையை ஈழத்தின் மூத்த முதுபெரும் கவிஞர் திரு .சோ.பத்மநாதனும் அரங்க திறப்புரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி தேவானாந்தும் திருமதி வாஸ்பதி றஜிந்திரன் வழிகாட்டலில் சாரங்க இசை மன்ற மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து ம் வரவேற்பு நடனத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக நடன வருகை விரிவுரையாளர் கணேசலிங்கம் டவன் நெறியாழ்கையில் நல்லூர் ஆளுமை அரங்க மாணவிகளும்

அறநெறி மாணவர்களின் கிராமிய நடன நிகழ்வும் கீதவாணி இசைக்கல்லூரி மாணவிகள் இசைச்சங்கமம், திருமதி. சு. அனுசாந்தி ஆசிரியர் நெறியாழ்கையில் நல்லை கலாமாந்தர்மாணவிகளின் தமிழ் வணக்க நடன நிகழ்வு, நல்லூர் பிரதேச கலைஞர்களின் மாருதப்பிரவீகவல்லி சரித்திர நாடகமும் கலாநிதி ஆறுதிருமுகன அவர்களின் யாழ்ப்பாண பண்பாட்டுவியல் அடையாள சொற்பொழிவு நல்லூர் நாட்டார் வழக்கியற் கலைமன்றத்தினரின் சாத்தியவான் சாவித்திரி இசைநாடகம் எனப்பல்வேறு அரங்க நிகழ்வுகளால் பண்பாட்டு பெருவிழா சிறப்புப்பெற்றது. இந்நிகழ்வில் கலை வாழ்வின் அடையாளங்களாய் பெருமை சேர்த்த இளங்கலைஞர்களுக்கு இளங்கலைஞர் விருதும் முதுபெருங்கலைஞர்களுக்கு கலைஞானச்சுடரும் வழங்கி கெளவிக்கப்பட்டனர்.

 

524033592 2582863058717901 7127781240327282212 n 522717979 1273583714166879 1985893992897203864 n IMG 9913  IMG 9989 

 

IMG 9969 IMG 9942 IMG 0154 522301603 1273600324165218 7800991397276116113 n

 

 

 

 

 

FaLang translation system by Faboba
Scroll To Top